Monday, 5 March 2012

ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நாம் ஒரு தொழிலாளி

* இறைவனே உலகம் என்ற நம்பிக்கை உறுதியாக உண்டானால்
    எல்லா பிரச்னைகளும் ஒழிந்து தீர்வு பெற்று விடுவீர்கள்.

* எவன் இறைவனைக் காண வேண்டும் என்று ஏங்கி அழுகிறானோ
  அவன் மீது இறைவனின் கருணை விழத் தொடங்கும்.

* உலக இன்பங்களில் மயங்கித் திரிபவன் இந்த பிறவியில் மட்டுமல்ல,
   எந்தப் பிறவியிலும் இறைவனை அடைய முடியாது.

* பணத்தின் மீது கொள்ளும் மோகம் மனிதனைப் பைத்தியமாக்கிவிடும்.
   காமம் மனிதனை இறைவனிடமிருந்து பிரித்து விடும் தன்மை கொண்டது.

* படிப்பதைக் காட்டிலும் கேள்வி ஞானம் மிகவும் உயர்ந்தது.
   கேட்பதைக் காட்டிலும் நேரில் காண்பது அதைவிடச் சிறந்தது.

* இறைக்காட்சி கிடைத்த பின்பே மனிதனிடம் இருக்கும் அறியாமை முற்றிலும்  அகலும். மன வலிமை படைத்தவர்களால் மட்டுமே உலக ஆசைகளைத் துறக்க முடியும்.

* கடவுள் நமக்கு முதலாளியாக இருக்கிறார்.
   நாம் அவரது வேலைக்காரர்கள்.  அவனுக்கு பணிவிடை செய்வது தான்    பிறவிப்பயன்.

* மனிதவாழ்வின் சாரமே பக்தியாக இருப்பது தான்.
   பக்தி கொள்ளாதவர்கள் வாழும் வாழ்வில் அர்த்தமில்லை.

* நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுங்கள்.
  அதே நேரத்தில் மனதை ஆண்டவனிடம் வைத்திருங்கள்.

No comments:

Post a Comment