Wednesday, 29 February 2012

பதினாறு வகைச் செல்வங்கள் !

'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க'
என திருமணங்களில் பல பெரியவர்கள் வாழ்த்துகிறார்கள்.

அவை இவை தான்.

கல்வி, மக்கள், வன்மை, இன்பம், தொழில், சுற்றம், கொடை, செல்வம், திருமணம், அருள், புகழ், செல்வாக்கு, வீடு, சுகம், கலை, ஆரோக்கியம்.

வட்டியில் சாப்பிடு

செட்டிநாட்டில் உண்பதற்குப் பயன்படுத்தப் பெறும் தட்டுக்கு  வட்டி என்று பெயர். வட்டியில் சோறு சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் நகரத்தார்.

போட்ட முதலில் பணத்தை எடுத்தால் தொழிலைப் பாதிக்கும் எனவே முதலைச் சாப்பிடுவது தவறு :  வட்டியில் சாப்பிட்டால்தான் நல்லது

என்ற கருத்தை விளக்கும் இந்தச் சொல்லாட்சி, எந்தக் தொழில் செய்தாலும் பொருந்தக் கூடிய வாழ்க்கைப் பாடமாகும்.

Tuesday, 28 February 2012

அருள்மிகு கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில்





அம்மன்       : கண்ணுடைய நாயகி அம்மன் 

பழமை        : 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்                : நாட்டரசன்கோட்டை

மாவட்டம்  : சிவகங்கை

மாநிலம்      : தமிழ்நாடு



தல வரலாறு :

நாட்டரசன் கோட்டையின் தென்புறம் 2 கி.மீ., தொலைவில் அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டு பகுதியில் அமைந்த கிராமங்களான பிரண்டகுளம், அல்லூர், பனங்காடியிலிருந்து தினமும் பால், மோர், தயிர் விற்க பலர் நாட்டரசன்கோட்டை வருவர். 

பிரண்டகுளம் கிராம எல்லையில் வரும் போது விற்பனைக்கு கொண்டு வரும் பால், மோர் குறிப்பிட்ட இடத்தில் தட்டி, தொடர்ந்து கொட்டிக்  கொண்டே இருந்தது. அவற்றை விற்க முடியாமல் அனைவரும் கிராமத்திற்கு வேதனையுடன் திரும்புவது வாடிக்கையாக நிகழ்ந்தது. இதற்கு காரணம் என்ன என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். நீண்ட நாட்கள் கிராமங்களில் நடத்தப்பட்ட விவாதத்திற்கு பின்னர் சிவகங்கை மன்னரிடம் பிரச்னையை கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
மன்னரிடம் பேச மக்கள் திரண்டு செல்வதற்கு முதல் நாளில் அம்பாள் மன்னரின் கனவில் தோன்றி, ""நான் பூமிக்கடியில் பிரண்டகுளம் கிராமத்தில் பலாமரம் பக்கத்தில் இருக்கிறேன்'' என கோடிட்டு காண்பித்தாள். மறுநாள் திரண்டு வந்த மக்களிடம் விஷயத்தை கூறிய மன்னரும் மக்களுடன் சென்று குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்த மக்களிடம் தரையை தோண்டி பார்க்க சென்னார். தோண்டிய பள்ளத்தில் அம்பாள் சிலை வடிவத்தில் காட்சியளித்தாள்.